வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 அக்டோபர் 2016 (17:49 IST)

த்ரிஷாவைத் தொடர்ந்து அரசியல்வாதியாகும் கேத்ரின் தெரேசா

கொடி படத்தில் த்ரிஷா அரசியல்வாதியாக நடித்துள்ளார். அதேபோல் கேத்ரின் தெரேசாவும் சினிமாவில் அரசியல்வாதியாகிறார். 

 
ராணா, காஜல் அகர்வால், நவ்தீப் ஆகியோர் நடிக்கும் தெலுங்கு படமொன்றில் கேத்ரின் தெரேசா அரசியல்வாதியாக நடிக்கிறாராம். 
 
இந்த படத்தை தேஜா என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டில் காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. கேத்ரின் தெரேசா ஏற்கெனவே தெலுங்கில் வெளிவந்த சரயனைடு படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார். 
 
தேஜா இயக்கும் இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருந்ததால் மீண்டும் அரசியல்வாதியாக அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.