Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்து மத அவமதிப்பு: கமல் மீது வழக்கு!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (15:57 IST)
வள்ளியூர் குற்றவியல் நீதி மன்றத்தில் கமலை எதிர்த்து வழக்கு பதியக்கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
நடிகர் கமல் மீது வழக்கு பதியப்பட வேண்டும் என நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் வள்ளியூர் குற்றவியல் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
கடந்த வாரம் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த கமல், அதில் மகாபாரதத்தை இழிவு படுத்தி பேசி உள்ளதாகவும், கமலின் இந்த பேச்சு இந்து மதத்தை அவமதிப்பதை போல் உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது குறித்து நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :