வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (22:29 IST)

கோலிவுட்டை கதறவிடும் தமிழ் ராக்கர்ஸ் மீது வழக்கு!!

தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ராஜசேகர் என்பவர் தமிழ் ராக்கர்ஸ் மீது புகார் அளித்தார். இந்த புகார் மனுவின் அடிப்படையில் தமிழ் ராக்கர்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
புதிய திரைப்படங்களை இணையத்தில் வெளியிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். சமீபத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் படம் நவம்பர் 14 ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. படம் திரையரங்குகளில் வெளியானது 9 ஆம் தேதிதான். 
 
இதனால், சட்டவிரோதமாக வெளியாகியுள்ள இந்த படத்தை இணையதளத்தில் தடை செய்ய வேண்டும் என்றும், மேலும் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியான அடுத்த நாளே இணையதளங்களில் வெளியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜசேகர் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
எனவே இந்த புகாரின் அடிப்படையில் சட்டவிரோதமாக திரைப்படங்களை பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கா்ஸ் உள்ளிட்ட 3 இணையதளங்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.