ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (07:45 IST)

’கோட்’ படத்தில் கேப்டன் விஜயகாந்துக்கு குரல் கொடுத்தது இந்த பிரபல ஹீரோவா?

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இரண்டே நாட்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் ஏஐ டெக்னாலஜி மூலம் அவரது காட்சி துல்லியமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்தது ஒரு பிரபல நடிகர் என்பது தெரியவந்துள்ளது. அவர் குட்நைட் ஒரு பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் மணிகண்டன் தான், கேப்டன் விஜயகாந்த் கேரக்டருக்கு குரல் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே மணிகண்டன் ஒரு டப்பிங் கலைஞர் என்பதும் பல முன்னணி பிரபல நடிகர்கள் போலவே பேசுவதில் வல்லவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தான் அவர் பல மேடைகளில் விஜயகாந்த் போல் பேசியிருந்ததை அடுத்து கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் காக குரல் கொடுத்துள்ளார்.

விஜயகாந்த் போலவே பேசியது மணிகண்டன் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva