வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 ஜூன் 2018 (15:35 IST)

பூமராங் படப்பிடிப்பு நிறைவடைந்தது

மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பூமராங் படத்தின் படப்பிடிப்புடன் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
 
கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் படம் ‘பூமராங்’. இந்தப் படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்க, சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி,  உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இசையமைத்த ரதன், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.  படத்தை இயக்குவதோடு, தன்னுடைய மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் கண்ணன்.
 
இந்தப் படத்தில், அதர்வா மூன்று கெட்டப்பில் நடிக்கிறார். இதற்காக, புகழ்பெற்ற மேக்கப் வல்லுநர்கள் ப்ரீத்திஷில் சிங், மார்க் ட்ராய் டிசோஸா இருவரும்  மெனக்கெட்டு அதர்வாவின் தோற்றங்களை உருவாக்கி உள்ளனர். 
 
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், அதர்வாவுடனான இனிமையான பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.