தாமதமாகும் வலிமை… போனி கபூரின் அடுத்த கூட்டணி !
வலிமை படம் தாமதமாகிக் கொண்டே செல்லும் வேளையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
போனி கபூர் தமிழில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அஜித்தின் அடுத்த படமான வலிமையையும் அவர் தயாரித்து வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது.
இதனால் போனி கபூர் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். இந்த படத்தை கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜா இயக்க உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. அருண்ராஜா காமராஜா விஜய்யை வைத்து படம் இயக்க முயற்சி செய்து அவரிடம் கதை சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.