செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (10:20 IST)

வலிமை குறித்து முதல் முறையாக பேசிய போனி கபூர்! ரிலிஸ் தேதி அப்டேட்

வலிமை குறித்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் தவம் கிடைக்காத குறையாக இருக்கும் நிலையில் முதல் முறையாக போனி கபூர் பேசியுள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான வேலைகள் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முதல் முறையாக போனி கபூர் போர்ப்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் வலிமை குறித்து பேசியுள்ளார். அதில் ‘பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் மொத்த படப்பிடிப்பும் முடியும். இன்னும் ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டுமே படம்பிடிக்கப்பட வேண்டியுள்ளது. பின் தயாரிப்புப் பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம். ரிலிஸ் தேதியும் விரைவில் இறுதி செய்யப்படும்’ எனக் கூறியுள்ளார்.