1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (14:57 IST)

அஜித்தின் ‘வலிமை’ அப்டேட் தந்த போனிகபூர்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை கடந்த பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் படக்குழுவினர்களை கேட்டு வருகின்றனர். ‘வலிமை’ படத்திற்கு பின்னர் தொடங்கப்பட்ட படங்களின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளிவந்ததோடு, படமும் ரிலீஸ் ஆகி விட்ட நிலையில் ‘வலிமை’ படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் கடந்த ஒரு வருடமாக வரவில்லை என்பது அஜித் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது 
 
இதனால் இயக்குனர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூருக்கு அஜித் ரசிகர்கள் அர்ச்சனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியிடம் கூட அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டு பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் நீண்ட காலமாக அஜித் ரசிகர்களின் பொறுமையை சோதித்து வந்த தயாரிப்பாளர் போனி கபூர் சற்றுமுன் தனது டுவிட்டரில் ‘வலிமை’ குறித்த அப்டேட்டை பதிவு செய்துள்ளார் 
 
‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராகி வருகிறது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது