வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 16 பிப்ரவரி 2019 (17:19 IST)

ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர்! பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவியின்  புடவைகளை  ஏலத்தில் விட்டு அந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தர இருப்பதாக அவரின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.


 
50 ஆண்டுகளாக திரைத்துறையில் ஜொலித்து வந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் , டோலிவுட் , என 5 மொழிகளிலும்  கலக்கினார் . இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்களுக்கு தாயானார் . 
 
இந்நிலையில் , கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி மாரடைப்பாடல் இறந்த ஸ்ரீதேவியின் சேலையை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை இந்தியா பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க இருக்கிறார் 
போனி கபூர் 


 
ரூ. 40,000 ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டு  அதில் கிடைக்கும் பணத்தை  ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் விதமாக என போனி கபூர் தெரிவித்துள்ளார்.