வலிமைக்குப் பின்னரும் போனி கபூர்தானா? கடுப்பாகும் அஜித் ரசிகர்கள்!
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான வேலைகள் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நாளுக்கு நாள் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு போனி கபூரை சமூகவலைதளங்களில் திட்டி வருகின்றனர். ஆனால் இப்போது வலிமை படத்துக்கு அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.