திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 26 ஏப்ரல் 2018 (15:40 IST)

படப்பிடிப்பு தளத்தில் வெடித்த குண்டு: பாலிவுட்டில் பரபரப்பு!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய குமார் 2.O படபிடிப்பை முடித்த கையோடு தனது அடுத்த படங்களில் நடித்து வருகிறார். இப்போது கேசரி என்னும் படத்தில் நடித்து வருகிறார். 
 
இப்படத்தின் படப்பிடிப்பு புனே அருகில் உள்ள சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் அக்ஷய் குமார் உட்பட படக்குழுவினர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
 
படத்தின் சண்டை காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாக செட் முழுவதும் தீ பரவியது. இதனால் படப்பிடிப்பில் பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட் முற்றிலும் கருகியது.
 
இதனால், படபிடிப்பு தளத்தில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகமே பரபரப்பில் உள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என கூறப்பட்டுள்ளது.