வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (13:08 IST)

போஸ்டர் கூட விடல.. நேரடியாக ரிலீஸ் தேதியை அறிவித்த ‘ராமாயணம்’ படக்குழு!

Ramayanam Movie

இந்தியில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டும் வரும் ‘ராமாயணம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இப்போதே அறிவித்துள்ளனர்.

 

 

இந்து புராணத்தில் மிக உயர்ந்தவையாக கருதப்படுவது ராமாயணம் மற்றும் மகாபாரதம். இரண்டுமே காலம் காலமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படமாக, சீரியல்களாக என வெளிவந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் ராமாயணம் அனிமேஷன் படமாகவும் வெளியானது.

 

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியில் பிரம்மாண்டமாக லைவ் ஆக்‌ஷன் படமாக ராமாயணம் உருவாகிறது. இந்த படத்தை நிதிஷ் திவாரி இயக்க, நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக கேஜிஎஃப் புகழ் யஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 

இந்த படத்திற்கான முதல் லுக் போஸ்டர் உள்ளிட்ட எந்த அப்டேட்டும் இதுவரை பெரிதாக வெளியாகவில்லை. ஆனால் அதற்கு முன்னரே பட தாயாரிப்பு நிறுவனம் இரண்டு பாகமாக உருவாகும் ராமாயணத்தின் ரிலீஸ் தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி ராமாயணம் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

 

இதுகுறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா “ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பில்லியன் கணக்கான இதயங்களை ஆண்ட இந்த காவியத்தை பெரிய திரையில் கொண்டு வருவதற்கான உன்னதமான தேடலை நான் தொடங்கினேன்.

 

இன்று, நமது அணிகள் ஒரே ஒரு நோக்கத்துடன் அயராது உழைக்கும்போது, ​​அது அழகாக வடிவம் பெறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்: நமது வரலாறு, நமது உண்மை மற்றும் நமது கலாச்சாரத்தின் மிகவும் உண்மையான, புனிதமான மற்றும் பார்வைக்கு பிரமிக்க வைக்கும் தழுவலை மக்களுக்கு வழங்குவது நமது இந்த  "ராமாயணம்" திரைப்படம்.

 

எங்களின் மிகப்பெரிய காவியத்தை பெருமையுடனும், பயபக்தியுடனும் உயிர்ப்பிக்கும் எங்கள் கனவை நிறைவேற்ற எங்களுடன் சேருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K