வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (17:24 IST)

சாமி 2: விக்ரம் பாபி சிம்ஹா மோதல்!!

சாமி 2 படத்தில் நடிகர் விக்ரமுக்கு வில்லனாக நடிக்க நடிகர் பாபி சிம்ஹா ஒப்பந்தமாகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


 
 
2003-ல் வெளியான சாமி படம் ஹிட்டானது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா இருவரும் ஜோடியாக நடித்தனர். இப்படம் விக்ரமின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 
 
அடுத்து சாமி 2 விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஹீரோவாக நடித்து வரும் பாபி சிம்ஹா தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக களமிறங்கவுள்ளார்.