1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (16:13 IST)

ஆண்டி இந்தியன் 2 கதை தயாராக உள்ளது… ப்ளு சட்ட மாறன்!

ப்ளு சட்ட மாறன் இயக்கிய ஆண்டி இந்தியன் திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை யூட்யூபில் விமர்சனம் செய்து வருபவர் ப்ளூசட்டை மாறன். இவர் தற்போது ஆண்டி இந்தியன் என்ற படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது சில காட்சிகளை வெட்ட சொல்லி வலியுறுத்தியும், அவற்றை வெட்டாமல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தணிக்கை சான்றிதழ் பெற்று படம் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் சுமாரான வசூலையே இந்த படம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிறிய பட்ஜெட் படம் என்பதால் மற்ற வழிகளில் லாபம் பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு படத்தின் இயக்குனர் மாறன் அளித்துள்ள பதிலில் ‘திரையரங்குகளில் சரியாக போகவில்லை என்பது உண்மைதான். ஆனால் சேட்டிலைட் உரிமைக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. பிறமொழிகளில் டப்பிங் உரிமைக் கேட்கிறார்கள். இது எந்த படத்தின் காப்பியும் இல்லை. இது ஒரு உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்துக்கான இரண்டாம் பாகத்துக்கான கதையே என்னிடம் உள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் படத்துக்கு நேர்மறையான விமர்சனங்களையே கொடுத்தனர். ஆனால் சமூக ஊடகங்களில் அதிகமாக எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தன’ எனக் கூறியுள்ளார்.