Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அக்‌ஷய் குமார் மூலம் ரஜினிக்கு தூதுவிடுகிறதா பா.ஜ.க?


Cauvery Manickam (Murugan)| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (15:13 IST)
அக்‌ஷய் குமார் மூலம் பா.ஜ.க. ரஜினிக்கு தூதுவிடுவதாகத் தகவல் பரவி வருகிறது.

 

 
இன்னும் ரஜினி வீட்டின் வாட்ச் மேன் மூலம் மட்டும்தான் கட்சியில் சேரச்சொல்லி ரஜினியை வற்புறுத்தவில்லை பா.ஜ.க. மற்றபடி, தன்னாலான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. ஆனால், தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும், ரஜினியை ஒரு வார்த்தை கூட தங்களுக்கு ஆதரவாக பா.ஜ.க.வால் பேசவைக்க முடியவில்லை.
 
இந்நிலையில், ரஜினியின் ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அக்‌ஷய் குமாரை, தங்கள் கட்சியில் சேரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறதாம் பா.ஜ.க. அக்‌ஷய் குமார், பூமி பட்னேகர் நடித்துள்ள ‘டாய்லெட் – ஏக் பிரேம் கதா’ படம், பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருடனும் அக்‌ஷய் குமாருக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அக்‌ஷய் குமாரை முதலில் கட்சியில் சேர்த்துவிட்டு, அவர் மூலம் ரஜினியை வளைக்கத் திட்டம் போட்டிருக்கிறதாம் பா.ஜ.க.


இதில் மேலும் படிக்கவும் :