1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (12:06 IST)

வேட்பாளர் பட்டியலில் பெயர்… ஆனால் கொண்டாட முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

கேரளாவில் பாஜக சார்பாக போட்டியிட அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் நடிகர் சுரேஷ் கோபி பெயர் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கும் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது என்பதும், குறிப்பாக தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த தகவலை சற்றுமுன் பார்த்தோம் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கேரள மாநில பாஜக பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்த சந்தோஷத்தைக் கூட கொண்டாட முடியாமல் சுரேஷ் கோபி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.