1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 29 ஜூன் 2018 (21:27 IST)

படமாகிறது எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை...

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது.

 
சினிமாவில் முற்போக்கு கருத்துகளை எடுத்துச் சொன்னவர்களில் முக்கியமானவர் எம்.ஆர்.ராதா. அதுவும் மூடநம்பிக்கைகள் மலிந்திருந்த அந்தக் காலத்தில், அவரை எல்லாரும் எள்ளி நகையாடினர். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து முற்போக்கு கருத்துகளைச் சொல்ல, ஒருகட்டத்தில் அதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.
 
அவருக்கு ‘நடிகவேள்’ என்ற பட்டத்தையும் மக்கள் வழங்கினர். அவருடைய குழந்தைகளான ராதாரவி, ராதிகா சரத்குமார், நிரோஷா மூவரும் சினிமாவில் கொடிகட்டப் பறந்தனர். இன்றைக்கும் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
 
இந்நிலையில், எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது. எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக் இந்தப் படத்தை இயக்கப் போகிறார். இவர் ‘சங்கிலி புங்கிலி கதவைத் தொற’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
 
‘பேரனாக மட்டுமின்றி, ரசிகனாகவும் என் தாத்தாவின் வெளிவராத கதையை உண்மையாகப் படமாக்குவேன்’ எனத் தெரிவித்துள்ளார் ஐக்.