Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காயத்ரிக்கு கட்டம் கட்டும் பிந்து மாதவி: அதிரடியை தொடங்கினார்!

காயத்ரிக்கு கட்டம் கட்டும் பிந்து மாதவி: அதிரடியை தொடங்கினார்!


Caston| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (12:30 IST)
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி 37 நாட்கள் ஆன பின்னர் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி களம் இறக்கப்பட்டுள்ளார்.

 
 
ஓவியாவுக்கு இருக்கும் செல்வாக்கை குறைக்க தான் பிந்து மாதவி களம் இறக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டது. ஆனால் பிந்து மாதவி நிச்சயம் ஓவியாவை சீண்ட மாட்டார். காரணம் ஓவியாவுக்கு வெளியில் ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆதரவு பிந்து மாதவிக்கு நன்றாகவே தெரியும்.
 
ஓவியாவுக்கு எதிராக தான் செயல்பட்டால் அது தனக்கு தான் எதிராக அமையும் என்பதும் பிந்து மாதவிக்கு தெரியும். அதே நேரம் மக்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் யார் மீது அதிருப்தியில் உள்ளார்கள் என்பதும் பிந்து மாதவிக்கு தெரியும்.
 
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருந்து ஓவியாவுடன் மோதல் போக்கில் இருந்து வந்த காயத்ரி ரகுராம் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். அவர் கூறிய பல வார்த்தைகளும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 
இதனை எல்லாம் நன்கு அறிந்த பிந்து மாதவி காயத்ரிக்கு எதிரான நிலைப்பாடை தனக்கு சாதகமாக எடுத்துள்ளார். இன்று ஒளிபரப்பப்பட உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிந்து மாதவி வெளியேற்றுவதற்கான நாமினேஷனில் காயத்ரி ரகுராமின் பெயரை பரிந்துரைத்துள்ளார். அவர் அதிகமாக பிக் பாஸ் வீட்டில் சண்டை போடுவதாக பிந்து மாதவி குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :