Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியா தான் எனக்கு போட்டி: பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார் பிந்து மாதவி!

ஓவியா தான் எனக்கு போட்டி: பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார் பிந்து மாதவி!


Caston| Last Modified ஞாயிறு, 30 ஜூலை 2017 (22:05 IST)
15 பேர் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் வெளியேற்றப்பட்டு 9 பேர் தான் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் ஆரம்பித்து 34 நாட்களுக்கு பின்னர் புதிய போட்டியாளர் ஒருவரை பிக் பாஸ் வீட்டில் களம் இறக்கியுள்ளனர்.

 
 
ஏற்கனவே புரோமோ மூலம் காட்டிய அந்த நபர் பிந்து மாதவி தான் என நெட்டிசன்கள் முன்னதாகவே கணித்தனர். அது போலவே இன்று பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
 
இவர் தெலுங்கு மொழி பேசுபவர். தெலுங்கில் பிக் பாஸ் நடந்தாலும் முதல் வாரத்துக்கு பின்னர் அவர் தமிழ் பிக் பாஸ் தான் பார்க்க ஆரம்பித்துள்ளார். அது தான் தனக்கு பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் புதிதாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிந்து மாதவிக்கு யார் போட்டியாக இருப்பார் என கமல்ஹாசன் அவரிடம் கேட்டார். அதற்கு எல்லாருக்கும் தெரியும் கண்டிப்பாக ஓவியா தான் எனக்கு போட்டியாக இருப்பார் என அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :