ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (19:32 IST)

இணையத்தில் சூப்பர் வைரலாகும் "விஜய் ஐ.டி கார்டு"!

தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 


 
மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில்  படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். 
 
விஜய் பிறந்த நாளில் இந்த இரண்டு போஸ்டர்களை சமூகவலைகளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில்  தற்போது இப்படத்தின் இப்படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஐடி கார்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல் என்ற பெயரும், தலைமை பயிற்சியாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 
இந்த ஐ.டி கார்டை கண்ட ரசிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.