தீபாவளிக்கு பிகில் அடித்த விஜய் - குதூகலத்தில் புல்லிங்கோ!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். ஏஜிஎஸ் தயாரிக்கும் இப்படம் வருகிற தீபாவளி தினத்தில் ரிலீசாகவிருந்தது. இதற்கிடையில் படத்தின் கதை என்னுடையது என்று கூறி இயக்குனர் செல்வா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் படம் வெளியாகுமா ஆகாதா? என்ற கவலையில் ரசிகர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் சற்று முன் இப்படத்திற்கு வந்த அனைத்து தடைகளும் நீங்கி குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் இருந்து வருகின்றனர். பிகில் கொண்டாட்டத்தில் இந்த வருட தீபாவளி அனைத்து ரசிகர்களுக்கும் ஸ்பெஷலாக இருக்கும்