செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (21:47 IST)

வெட்டி பந்தாவில் யாஷிகா, ஐஸ்வர்யா அண்ட் கோ: வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

ஆட்டோவில் சென்றதெல்லாம் ஒரு பெருமை என நினைத்துக்கொண்டு பிக்பாஸ் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் தான் யாஷிகா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். எப்பொழுதும் அரைகுறையாக ஆடை அணிவது இவரது வாடிக்கை. இவரது நெருங்கிய நண்பர் சர்ச்சைகளுக்கு பெயர் போன ஐஸ்வர்யா. இவர்கள் இரண்டுபேரும் சேர்ந்து கொண்டு செய்யும் அலப்பறைகளை சொல்லி மாளாது. பந்தா என நினைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் செயலை பார்க்க சகிக்காது.
அப்படி இவர்கள் இரண்டுபேரும், ஆட்டோவில் சென்றதையெல்லாம் ஒரு பெருமை என நினைத்துக்கொண்டு அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இதனைப்பார்த்த பலர், ஆட்டோவில் போவதெல்லாம் பெருமையா, இவர்கள் இப்படிதானா இல்லை, வெட்டி விளம்பரத்திற்காக இப்படி செய்கிறார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.