திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (22:09 IST)

நீங்க கேட்க வேண்டிய அவசியம் இல்லை: டேனியலுக்கு பல்பு கொடுத்த பொன்னம்பலம்

பிக்பாஸ் வீட்டில் ஓரளவிற்கு அவராகவே உள்ள கேரக்டர் என்றால் அது பொன்னம்பலம்தான். அதனால் தான் அவர் நான்கு வாரங்கள் எவிக்சன் பட்டியலில் இருந்தபோதிலும் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று ரம்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடக்கின்றது. இந்த வாரம் வெளிப்படையாகவே யார் நாமினேஷன் செய்யப்படுகிறாரோ அவர் முன்னரே நாமினேஷனுக்கான காரணம் கூறப்படுகிறது.
 
அந்த வகையில் பொன்னம்பலம், டேனியலை நாமினேஷன் செய்கிறார். டேனியல் இன்னும் சில விஷயங்களை விளையாட்டுத்தனமாக செய்து கொண்டிருப்பதாக பொன்னம்பலம் கூறியபோது, 'என்ன மாதிரி என்று சொல்ல முடியுமா? என்று டேனியல் கேட்க அதை நீங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பொன்னம்பலம் டேனியலுக்கு பல்பு கொடுக்கின்றார். இதனால் டேனியலின் முகம் சுருங்குகிறது. அதேபோல் வைஷ்ணவி டேனியலையும், டேனியல் வைஷ்ணவியையும், செண்ட்ராயன் மும்தாஜையும் நாமினேட் செய்கின்றனர். நாமினேட் பட்டியலின் இறுதி வடிவத்தை இன்று இரவு பார்ப்போம்