வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (14:49 IST)

பிக்பாஸ் அபிஷேக் 2வது திருமணம்.. மணமகள் யார்? வைரல் புகைப்படம்..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அடுத்து இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அபிஷேக் ஒரு சில வாரங்களில் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் அதன்பின் மீண்டும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்தார். ஆனாலும் அவர் அதிக நாள் நீடிக்காமல் மீண்டும் எவிக்சன் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
யூடியூப் சினிமா விமர்சனம் மூலம் பிரபலமான அபிஷேக் சினிமா சம்பந்தப்பட்ட விவாதங்களிலும் கலந்து கொள்வார் என்பதும் அவரது விவாதம் சில சமயம் சர்ச்சைக்குரிய வகையில் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அபிஷேக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தீபா என்பவரை திருமணம் செய்த  நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த நிலையில் தற்போது அவர் சுவாதி நாகராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. பிக் பாஸ் அபிஷேகக்கிற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva