வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (19:06 IST)

மமதிக்கு தண்டனை கொடுக்கும் செண்ட்ராயன் - ப்ரோமோ வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 
இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், மும்தாஜ் சரியாக வேலை செய்யவில்லை என கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், ஊட்டி விட சொல்வது தவறு என வைஷ்ணவி கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. மூன்றாவது வீடியோவில், நித்யாவை பாலாஜி அசிங்கமாக திட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், 4வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஆனந்த் வைத்தியநாதனிற்காக மமதி ஒரு பாடலை பாடுகிறார். அந்த பாடலை கேட்கும் அனைவரும் முகம் சுளிக்கின்றனர். இதன்பின்னர் செண்ட்ராயன், மமதியிடம் நான் உங்களுக்கு ஒரு தண்டனை தருகிறேன் என கூறி அவரை இன்று முழுவதும் யாருடனும் பேசக் கூடாது என கூறுகிறார்.