Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழக இளைஞரை திருமணம் செய்யும் ஆசையை வெளிப்படுத்திய நமீதா!

Sasikala| Last Modified சனி, 15 ஜூலை 2017 (11:57 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 11 போட்டியாளர்களே உள்ள  நிலையில், 19வது நாளை எட்டி விட்டது. இதில் சண்டைகள் போடுவது மற்றவர்களைப் பற்றி பேசுவது என்பது தினமும் அரங்கேறி வருகிறது.

 
 
பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அவ்வப்போது தங்களை பற்றியும், வாழ்க்கைத்துணை பற்றியும் பேசி வருகின்றனர். நேற்றைய  நிகழ்ச்சியில் நமீதா பேசும்பொழுது தமிழ் இளைஞரை திருமணம் செய்து தமிழ் குடும்பத்துக்கு மருமகளாக செல்லவே விருப்பம் என்று கூறியுள்ளார். மேலும் தன் அம்மாவுக்கு பிடித்த மாதிரியாகவும், பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாகதான் இருக்கும் என்றும் தெரிவித்தார். 
 
உடனே அங்கிருந்த ரைசாவும் அதே போல் தமிழ் இளைஞரை திருமணம் செய்யவே விருப்பம் என்றார். குறுக்கிட்ட ஆர்த்தி  நமீதாவுக்கு தமிழ் நாட்டு மருமகளாக ஆசையாம் இளைஞர்களே, தகுதியுடையவர்கள் உடனே அவங்க அம்மாவை போய்  பாருங்க என்றும், பிக் பாஸ் வீட்டிலிருந்து நேராக மருமகளாக வருவதற்கும் நமீதா ரெடியாம் என்று கூறுகிறார்.
 
நமீதா சூரத்தை சேர்ந்தவர், ரைசா பெங்களூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் தன்னுடைய  திருமண ஆசையையும் சொல்லியுள்ளார் நமீதா. அதோடு இல்லாமல் இந்த வார எலிமினேஷனில் யார் வெளியேறப்போகிறார்  என்ற எதிர்பார்ப்பில் விறுவிறுப்பாக செல்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.


இதில் மேலும் படிக்கவும் :