1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (13:27 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்க பாய்ந்த சக்தி; தைரியமாக நின்ற ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டும், கலாய்த்தும், விமர்சனங்கள் வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஓவியா மீது மற்ற போட்டியாளர்கள் அனைவரும் செம கடிப்பில் இருக்கிறார்கள்.

 
இந்த நிலையில் ஓவியா யாரையும் மதிப்பதில்லை, எந்த வேலையும் செய்வதில்லை என்று நமீதாவும், காயத்ரியும் குறை சொல்கிறார்கள். இதனால் நடிகை ஓவியாவை ஓரம்கட்டி வெளியேற்ற காயத்ரி, நமீதா உள்ளிட்டவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதோடு, மற்ற போட்டியாளர்களையும் கூட்டு சேர்த்து வருகின்றனர்.
 
இன்றைய ப்ரொமோ வீடியோவில் ஓவியாவுடன் நடிகர் சக்தி ஏதோ காரணத்திற்காக சண்டை போடுகிறார். ஓவியாவை கேரட்டரே சரி இல்லை என கூறி வரும் சக்தி, தப்பெல்லாம் பண்ணிட்டு எதுவும் பண்ணாததுபோல் இருந்தா, ஓங்கி..  அறஞ்சிடுவேன் என சொல்ல, "எங்க அறைங்க பாப்போம்" என் சக்தியின் எதிரில் நின்கிறார் ஓவியா. மற்ற போட்டியாளர்கள் பதட்டத்தில் வந்து தடுக்கின்றனர். இதனால் ஒரே பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காக அப்படி நடந்துகொண்டார் சக்தி என்பதை  வரும் நிகழ்ச்சியில்தான் தெரியவரும்.