பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக ஓவியாவுக்கு நன்றி: கருத்து கூறிய பிரபலம்!!

Sasikala| Last Modified புதன், 9 ஆகஸ்ட் 2017 (16:31 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களால் ஓவியா ஒதுக்கப்பட்ட போது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் பார்க்க காரணம் நடிகை ஓவியாதான்.

 
 
இந்நிலையில் ஓவியாவின் ஆதரவாளர்களில் நடிகர் ரகுமானும் ஒருவர். ஓவியாவுக்கு ஆதரவாக ட்வீட்செய்து இந்நிலையில் ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஓவியா வெளியேறியது பற்றி கருத்து தெரிவித்த நடிகர் ரகுமான், ஓவியா  வெளியேறியதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை ஓவியா ஆர்மிக்காரர்கள் நிறுத்திவிட்டனர். நடிகர் ரகுமானும் பிக்  பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தியுள்ளார்.


 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்காக ஓவியாவுக்கு நன்றி. நிகழ்ச்சியின் மீதான ஈர்ப்பு போய் விட்டது. அதனால் தற்போது எனக்கு நிறைய நேரம் கிடைத்துள்ளது என்று ட்வீட்டியுள்ளார் நடிகர் ரகுமான்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :