செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:43 IST)

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் லாஸ்லியா- கவின் காதல் தான் சூடு பிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக எடுத்து சென்றது. இவர்களின் காதலுக்கு அவர்களது ஆர்மிஸ் பெரும் ஆதரவு கொடுத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் எந்த படமும் பெரியளவில் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் அவர் சமூகவலைதளங்கள் மூலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அந்தவகையில் இப்போது படுத்துக்கொண்டு எடுத்த சில புகைப்படங்களை வெளியிட அவை வைரல் ஆகி வருகின்றன.