திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 15 ஜூலை 2017 (16:31 IST)

பிக்பாஸ் வீட்டில் விடாமல் ஜூலியை டார்கெட் செய்யும் ஆர்த்தி; கடுப்பான பார்வையாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஜூலியை டார்கெட் செய்தே அனைத்து போட்டியாளர்களும் களத்தில் இறங்கினர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்டவரும் ஜுலி தான். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதலே பலமுறை சக போட்டியாளர்களால் கிண்டலுக்குள்ளானார்.

 
ஜுலிக்கும், ஆர்த்தி மற்றும் காயத்ரிக்கும் இடையே சமீபத்தில் கூட சண்டை வந்து போனது. இந்நிலையில் இன்று ஓவியா சமையல் செய்து கொண்டிருக்கும்போது ஜுலியின் குடும்பத்தை பற்றி விசாரித்தார். அப்போது ஜுலி தான் கடந்து வந்த பாதை  பற்றி கூறினார். அப்போது ஜுலி மருத்துவராக ஆசைப்பட்டாராம். ஆனால் வசதியில்லாததால் செவிலியராக மாறியதாக  கூறினார்.
 
மேலும் வெளிநாட்டில் வேலை பார்க்க விருப்பப்பட்டு ஒரு ஏஜெண்ட்டிடம் 3 லட்சம் கொடுத்து ஏமாந்து போனதாக கூறினார். இதை அறிந்த அவரது அப்பா, பணம் போனால் பரவாயில்லை திரும்பி வா என்று ஆறுதல் கூறினாராம். அடுத்த நாளே ஒரு மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்து விட்டேன் என கூறிக்கொண்டிருந்தார். இதனை கேட்டுக்கொண்டிருந்த ஆர்த்தி அவருக்கு  பின்னால் நின்று கொண்டு கேமராவை பார்த்து, காதை பொத்தியும் ஜுலி ரீல் சுற்றுகிறார் என்பது போல் கையசைத்து கிண்டல்  செய்தார்.
 
இத்தகைய சர்ச்சைகள் நடந்த கொண்டிருந்தாலும் காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சினேகன் போன்றோரின் நடவடிக்கைகள் `பிக் பாஸ்'  பார்வையாளர்கள் மத்தியில் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றன.