Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் போட்டியில் ரைசாவை அழவைத்த நடிகை ஓவியா!

Sasikala| Last Updated: திங்கள், 31 ஜூலை 2017 (16:28 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்கின்போது ஒவ்வ்ரு போட்டியாளர்களுக்கும் ஒரு டிசர்ட் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்களின் படம் வரைந்திருக்கும். தான் அணிந்திருக்கும் டிசர்ட்டில் உள்ள போட்டியாளரைப்போல் நடித்து காண்பிக்க வேண்டும் என்பது போட்டியின் விதியாகும்.

 
கமல் ஒவ்வொரு போட்டியாளரிடமும் கேள்வி கேட்பார், அதற்கு அவர்கள் நடித்து காட்ட வேண்டும். ஓவியா முறை  வந்தபோது, அவர் அணிந்திருந்த டிசர்ட் ரைசா படம் உள்ளதால், அதைபோல் நடிக்க வேண்டும். அதனால் ரைசாவை போல  ஓவியா நடித்து காட்டினார்.
 
அப்போது நான் வெளியே போக வேண்டும். எனக்கு செல்போன் தாங்க. எனக்காக என் பாய் பிரண்ட் வெயிட் பன்றார் என கூறியதோடு, ரைசாவின் பாய் பிரண்ட் பெயரையும் கூறிவிட்டார். ஆனால் அந்த பெயர் சொன்னபோது மட்டும் சத்தம்  வரவில்லை.
 
ஆனாலும் நிகழ்ச்சியின் கூடியிருந்த ரசிகர்களுக்கு மட்டும் கேட்டு விட்டது. இந்த நிகழ்வினால் ரைசா கதறி கதறி அழுதார்  என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் அதிர்ச்சியான ரைசா, ஓவியாவின் இந்த செயலை கண்டு, இது சரியில்லை என்றும், நிகழ்ச்சியில் இவ்வாரு கூறியது தவறு என்றும் கூறி அழுதார். மேலும் கேமரா முன் நின்று இதனை ஒளிபரப்ப வேண்டாம்  எனவும் கேட்டு கொண்டார்.


இதில் மேலும் படிக்கவும் :