ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (17:39 IST)

காதலரை பிரிந்தார் பிக்பாஸ் ஆயிஷா? நிச்சயதார்த்த போட்டோக்கள் இணையத்தில் நீக்கம்!

சீரியல் நடிகை ஆயீஷா  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்ற  சீரியல் மூலம் மக்களுக்கு பரீட்சியமனார். அந்த சீரியலில் அடங்காத வாயாடி கதாநாயகியாக அனைவரது மனதையும் கவர்ந்தார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். அப்போது தான் காதலிப்பதாக கூறியிருந்தார். 
 
மேலும் விஜய் டிடிவியில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா யார் அந்த நபர் என கேட்டதற்கு வெட்கப்பட்டு சிரித்தார். இதையடுத்து பிக்பாஸில் இருந்து வெளியில் வந்ததும் காதலர் தினத்தன்று தன் காதலனை அறிமுகப்படுத்தினார். அதையடுத்து இருவரும் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். 
 
இந்நிலையில் திடீரென தனது சமூகவலைத்தள பக்கத்தில் இருந்து தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை டெலீட் செய்துள்ளார். இதனால் அவர் காதலரை பிரிந்துவிட்டாரா? என சமூகவலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.