திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (13:19 IST)

ஷெரினை வச்சு செய்யும் ரியோ மற்றும் ரக்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. 17 போட்டியாளர்கள் கொண்டு துவங்கப்பட்ட இந்த சீசனில் தற்போது சாண்டி , ஷெரின் , லொஸ்லியா , முகின் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இதில் யார் டைட்டில் கார்ட் வெல்வார் என்பது குழப்பாக இருந்து வருகிறது. 


 
ஏனென்றால், மக்கள் விருப்பும் நபர் முகின், அவருக்கு தான் மக்கள் ஒட்டு அதிகரித்து லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார். அதற்கடுத்து லொஸ்லியா , அடுத்து சாண்டி, கடைசியாக ஷெரின் இருக்கிறார். இதில் ஷெரின் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக நாமினேஷனில் இருந்து வருகிறார். ஆனாலும், எதோ ஒரு காரணம் காட்டி அவரை சேவ் செய்து வருகிறது விஜய் டிவி. இதில் முகின் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லொஸ்லியா தான் டைட்டில் வின்னர் ஆவார் என பொதுவான கருத்து நிலவி வருகிறது. 
 
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் விஜய் டிவி பிரபலங்களான பாலாஜி, ரியோ, ரக்ஷன் , மாகாபா ஆனந்த் , ப்ரியங்கா உள்ளிட்டோர் சென்றுள்ளனர். தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில் ரியோ , பாலாஜி இருவரும் ஷெரின் தமிழ் பேசுவதை கலாய்த்து பிக்பாஸ் வீட்டையே குதூகலமாக மாற்றியுள்ளனர்.