ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (12:46 IST)

ஒரு பரபரப்பு இல்ல... ஒரு விறுவிறுப்பு இல்ல..வனிதாவும் முன்ன மாதிரி இல்ல!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உருப்படியான டாஸ்க் எதுவும் கொடுக்காமல் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கின்றனர். அட நிகழ்ச்சி தான் ஸ்வாரஸ்யமில்லாமல் போகுது ப்ரோமோ வாச்சும் கொஞ்சம் இன்டெஸ்ட்டிங்கா போடலாம்ல.. இங்கு அதுவும் கிடையாது. 


 
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியே சலிப்பு தட்டிவிட்டதாக பார்வையாளர்கள் கூறிவந்த நிலையில் இன்று அதை விட  மோசமாக இருக்குமோ என புலம்பி வருகின்றனர். கிராமத்து டாஸ்க் என்ற பெயரில் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் சில வரலாற்று நிகழ்வுகளை கூத்து நாடகமாக அரங்கேற்றறி வருகின்றனர். இதில் போட்டியாளர்கள் நடித்து தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
அந்தவகையில் இந்த ப்ரோமோவில் தர்ஷன் சிறப்பான நடிப்பை உணர்ச்சியுடன் வெளிப்படுத்திள்ளார் என பலர் கூறி வருகின்றனர். மேலும் இந்த கெட்டப்பில் ஷெரின் அழகை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வருகின்றனர். ஆனால், இதெல்லாம்  இருந்தும் என்ன பலன்? நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லையே...இதில் வனிதாவும் ஒன்றும் பெரிதாக சம்பவம் செய்யவில்லை. வர பிக்பாஸ் பார்ப்பதற்கே கடுப்பாக இருக்கிறது என நெட்டிசன்ஸ் திட்டி வருகின்றனர்.