Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாவை வில்லியாக்க முயலும் விஜய் டிவி: கொந்தளிப்பில் புரட்சிப்படை


sivalingam| Last Updated: வெள்ளி, 28 ஜூலை 2017 (22:50 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஓவியாவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர் பொதுமக்களும் ரசிகர்களும். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் சாதாரண நடிகையாக இருந்த ஓவியா இன்று வெளியே வந்தால் நம்பர் ஒன் நடிகையாகிவிடுவார்.
 

 


ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட தற்போது ஓவியாவை குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இன்னும் சொல்ல போனால் ஓவியாவுக்கு ஏதாவது ஒன்று என்றால் விஜய் டிவியின் பெயரை டேமேஜ் செய்ய கூட ரசிகர்கள் தயங்க மாட்டார்கள் என தெரிகிறது.
 
இந்த நிலையில் ஓவியாவை வேண்டுமென்றே வில்லியாக்க இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. எந்தவித தகுதியும் இல்லாத ஜூலியை ஜட்ஜ் ஆக நியமனம் செய்ததில் இருந்தே ஓவியாவுக்கு ஜூலிக்கும் வேண்டுமென்றே சண்டை வரவேண்டும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியினர் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தவாறே மோதலும் வந்தது. ஓவியா கொஞ்சம் கொஞ்சமாக வில்லியாக்கப்படுகிறார். இதனால் ஓவியா புரட்சிப்படையினர் கொந்தளிப்பில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :