செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 7 மே 2018 (15:07 IST)

இருட்டு அறைக்கு முரட்டு குத்துவிட்ட பாரதிராஜா

சமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வந்தாலும் பல்வேறு தரப்பினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொச்சையான காட்சிகள், படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பியுள்ள இந்த படத்தை மறைமுகமாக தாக்கி இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 

இந்த அறிக்கையில் அவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் அவர் கூறியிருப்பது இந்த படத்தை தான் என்பது இந்த அறிக்கையை கூர்ந்து படிப்பவர்களுக்கு தெரியவரும். பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமீபகாலமாக கூறி வந்த பாரதிராஜா முதன்முதலில் ஒரு உருப்படியான அறிக்கையை வெளியிட்டிருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.