வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (21:44 IST)

இனிமேல் தான் களையெடுக்க போகிறேன்: வெற்றி பெற்ற கே.பாக்யராஜ் பேச்சு!

Bhagyaraj
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்தலில் கே பாக்யராஜ் மற்றும் அவரது அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது
 
இந்த பதவி ஏற்பு விழாவில் கே பாக்யராஜ் பேசும்போது தேர்தலில் வெற்றிபெற்றது பெரிய விஷயம் இல்லை என்றும் இனிமேல் எதிரிகள் யார் என்று தெரிந்து அவர்களை களை எடுப்பதுதான் பெரிய விஷயம் என்றும் தெரிவித்தார்
 
கதாசிரியர்களின் உரிமைக்காக போராடுவது எங்கள் கடமை என்றும் எங்களுக்கு எதிரணி என்று எதுவும் கிடையாது என்றும் எல்லோரும் ஒரே அணிதான் என்றும் தெரிவித்தால்
 
மேலும் அளவுடன் பேசுபவர்களை தான் உலகம் பாராட்டும் என்பதால் நான் அளவுடன் பேசுகிறேன் என்றும் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்றால் இந்த வெற்றி அனைவருக்கும் பொதுவானது என்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் பேசினார்.