வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (20:34 IST)

உடற்பயிற்சி நிபுணருக்கு சொகுசுக் கார் பரிசளித்த பாகுபலி ஹீரோ !

நூற்றுக்கணக்கான ஹீரோக்கள் திரையில் மட்டுமே ஹீரோக்களாக இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஹீரோக்களாக உள்ளனர்.

அந்த வகையில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் அவர்கள் ஐதராபாத்தில் புறநகரில் உள்ள 1650 ஏக்கர் காடுகளை தத்தெடுக்க முன்வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாகுபலி படத்தில் தனது ஆஜானபாகுவான உடல் கட்டமைப்பு உருவாகக் காரணமாக இருந்த ஜிம் கோச்சரும் உடற்பயிற்சி நிபுணருமான லட்சுமணன் ரெட்டிக்கு பல கோடி மதிப்புள்ள ரேஞ்சர் ரோவர் காரைப் பரிசளித்துள்ளார் பிரபாஸ்.