வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 மே 2017 (11:05 IST)

சிவகாமியா? தேவசேனாவா? அவந்திகா பாகுபலி லிஸ்டலயே இல்ல!!

பாகுபலி படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகி ஹிடாகியுள்ளது.  தற்போது இப்படத்தில் சிறந்த பெண் கதாபாத்திரம் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 


 
 
பாகுபலி படத்தில் அமரேந்திர பாகுபலியாகவும், மகேந்திர பாகுபலியாகவும் நடித்து பிரபாஸ் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு கதாபாத்திரமாக உள்ளார். இவரைத் தொடர்ந்து வில்லன் ராணா மற்று கட்டப்பா கதாபாத்திரம் பெரிதாய் பேசப்படுகிறது.
 
பெண் கதாபாத்திரத்தில் படத்தில் மூன்று முக்கிய இடத்தில் சிவாகாமி தாவி, தேவசேனா மற்றும் அவந்திகா கதாபாத்திரங்கள் உள்ளன. 
 
இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபத்திரங்கள் எது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதில், தமன்னாவை விட அனுஷ்கா தான் சிறந்த பெண் கதாபாத்திரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், அனுஷ்காவின் தேவசேனா கதாபாத்திரத்தயும் ரம்யா கிருஷ்ணனின் சிவகாமி தேவி கதாபாத்திரத்தையும் ஒப்பிட்டு எது சிறந்தது என கூறமுடிவில்லை என தெரிவித்துள்ளனர். 
 
மேலும், இப்படத்தில் அனுஷ்காவின் வால்வீச்சும், பிரபாஸ் உடனான காதலும், அவரத் தாய் தேவசேனா போன்ற கதாபாத்திரங்கள் காரணமாக அவர் தான் சிறந்த பெண் கதாபாத்திரம் என்று நிரூபித்துள்ளார்.