1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (15:15 IST)

பிக்பாஸை நம்பி ஏமாந்த நடிகர் சக்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் நடிகர் சக்தியும் ஒருவர். சக்தி 50 நாட்களை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். ஓவியா வெளியேற காயத்ரி, ஜூலி மற்றும் சக்தி ஆகியோர் முக்கிய காரணம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ட்ரிகர் என்ற பெயர்  அடைமொழியை பெற்றவர் நடிகர் சக்தி.

 
ஓவியா விசயத்தில் தன் தவறை உணர்ந்து பொது மேடையில் மன்னிப்பு கேட்டார். இதனால் அவரின் குணம் அனைவரையும்  கவர்ந்தது. இதனை பலரும் வரவேற்றதோடு, எதிர்பாராத ஒன்றாக இருந்தது. 
 
இந்நிலையில் தற்போது சக்தி பேட்டி ஒன்றில், பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் கிடையாது. எந்தெந்த காட்சிகளை இணைக்க வேண்டும் என்பது மட்டுமே ஸ்கிரிப்ட். ஒருவரை நல்லவராகவும், கெட்டவராகவும் காட்டுவது பிக்பாஸின் வேலையாகும்.
 
நான் செய்த சிறு தவறுகளை காண்பித்தார்களே தவிர, நல்ல விஷயங்களை அவர்கள் காட்டவேயில்லை. இதை நான்  பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. பிக்பாஸிலிருந்து வந்த பிறகுதான் எல்லாரையும் நம்பி ஏமாந்துவிட்டோம் என தெரிந்தது. இனி என்னை மட்டுமே நான் நம்புவேன். சமூக வலைதளங்களில் வந்த சில கமெண்ட் மற்றும் கெட்ட பெயர்களால்  என்னுடைய அம்மா அழுதார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.