வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:22 IST)

நாயகியாக மாறிய ’அரபுக்குத்து’ பாடகி ஜொனிதா காந்தி!

நாயகியாக மாறிய ’அரபுக்குத்து’ பாடகி ஜொனிதா காந்தி!
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’அரபுக்குத்து’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பதும் தெரிந்ததே. 
 
அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாடிய இந்த பாடலில் இருவரது செம ஆட்டமும் இந்த வீடியோவில் இருந்ததால் அதையும் மக்கள் ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் ஜொனிதா காந்தி ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருவதாகவும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் அந்த படத்தை தயாரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது 
 
 ’வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு நண்பராக நடித்த கிருஷ்ணகுமார் என்பவர்தான் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த பணத்தை விநாயக் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது