1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (19:09 IST)

''பீஸ்ட்'' பட ஃபரஸ்ட் சிங்கில் ரிலீஸ் தேதி? விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்  என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் தனது டுவிட்டரில் ஒரு தகவல் வெளியிட்டார். அதில், ரசிகர்களே அமைதியாக பீஸ்ட் திருவிழாவுக்குக் காத்திருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.அதனால் விரைவில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் ரிலீஸாகலாம் என ரசிகர்கள் கூறினர்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் பாடல் வெளியாகலாம் என டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் ஹெஸ்டேக் பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர். மேலும், இதன் புரோமோ வீடியோவும் தயாராகிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக படக்குழு எதுவும் அறிவிக்கவில்லை.#BeastFirstSingle