1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (08:16 IST)

‘கே.ஜி.எஃப் 2’, பீஸ்ட் மோதல் குறித்து யாஷ் கருத்து!

கே.ஜி.எஃப் 2’, பீஸ்ட் மோதல் குறித்து யாஷ் கருத்து!
விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் யார் நடித்த கேஜிஎப் 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்த நாளில் ரிலீசாக இருக்கும் நிலையில் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இரண்டுமே தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் வெளியானது. இந்த விழாவில்  கேஜிஎப் மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு திரைப்படங்களும் போட்டி திரைப்படங்கள் அல்ல என்றும் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இது தேர்தல் இல்லை என்றும் இது சினிமா என்றும் விஜய் சார் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது என்றும் நான் கண்டிப்பாக பீஸ்ட் படம் பார்ப்பேன் என்றும் அதே போல் விஜய் ரசிகர்களும் கேஜிஎப் 2 படம் பார்ப்பார்கள் என நம்புகிறேன் என்றும் கூறினார் 
 
இரண்டு படங்களும் போட்டியில் போட்டியாக வெளிவரவில்லை இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்று பாசிட்டிவாக யாஷ் தெரிவித்துள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது