திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (09:15 IST)

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த விஜய்டிவி கூட்டம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் எந்த நிகழ்ச்சி என்றாலும் அதில் ஒரு சில கூட்டம் சிறப்பு விருந்தினராக வரும் வாடிக்கை இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் டிவியின் குழு ஒன்று நுழைந்துள்ளது. ஆம் விஜய்டிவியின் பாலாஜி பிரியங்கா உட்பட நால்வர் இன்று சிறப்பு விருந்தினராக உள்ளே நுழைந்துள்ளனர்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, அபிராமி, சேரன், கஸ்தூரி, சாக்சி என 5 சிறப்பு விருந்தினர்கள் கடந்த இரண்டு நாட்களாக இருந்துவரும் நிலையில் தற்போது மேலும் நான்கு உள்ள சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளதால் பிக்பாஸ் வீடு கலகலப்பாகவும் பரபரப்பாகவும் மாறியுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் டாஸ்க் உள்பட எந்த விளையாட்டும் இன்றி சிறப்பு விருந்தினர்கள் வரும் வாரமாக இந்த வாரம் மாறிவிட்டதால் நிகழ்ச்சி போரடித்து வருவதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் நான்கு பேர் மட்டுமே இருந்தால் நிகழ்ச்சி சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால் விருந்தினர்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புதிதாக வந்த சிறப்பு விருந்தினர்கள் சாண்டியிடம் நெருக்கமாக உள்ளனர். அது மட்டுமன்றி சிறப்பு விருந்தினராக வந்த பிரியங்கா, சாண்டிக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி வெளியே வந்தவுடன் வேற லெவல் நீ இருப்பாய் என்று கூறியது அவருக்கு ஆருதலான வார்த்டைகளாக கருதப்படுகிறது