செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (18:59 IST)

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உட்பட பலர் நடித்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த ட்ரெய்லருக்கு ஒரு பக்கம் வரவேற்பு குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் பிதாமகன் இரண்டாம் பாகம் போல் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பொதுவாக பாலா ஒரே மாதிரி தான் படம் எடுப்பார் என்றும், அவரது ஹீரோக்கள் அனைவரும் மனநலம் பாதித்த வகையில் இருப்பார்கள் என்றும், அதிகமான வன்முறை காட்சிகள் இருக்கும் என்றும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

அந்த வகையில் பிதாமகன் படத்தில் விக்ரம் கேரக்டர் போலவே வணங்கான் படத்தின் அருண் விஜய் கேரக்டர் இருப்பதாகவும் பிதாமகன் படத்தில் இருப்பது போலவே காடு மேடுகளில் சுற்றி வில்லன்களை விரட்டி விரட்டி கொல்லும் காட்சிகள் இடம் பெற்று இருப்பதை அடுத்து இந்த பக்கம் படம் பிதாமகன் ரீமேக்கா? அல்லது பிதாமகன் இரண்டாம் பாகமா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பு  அபாரமாக இருப்பதாகவும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை அசத்தலாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva