Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலி- 2 படத்தில் உள்ள ரகசியம் 20 நிமிடங்களில்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (18:05 IST)
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பாகுபலி- 2. 

 
 
இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்து பல்வேறு வதந்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.
 
இப்படத்தில் 4 கிளைமேக்ஸ் காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த தகவலை இயக்குனர் மறுத்துள்ளார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 
பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என்ற கேள்விக்கான பதிலை படம் வெளியான பிறகு பார்ப்பவர்கள் கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் விடையை தெரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :