நடிகர் விஜய்யை மோசமாக திட்டிய பிரபல இயக்குநர்

cauveri manickam| Last Updated: திங்கள், 6 நவம்பர் 2017 (15:58 IST)
தளபதி விஜய் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர். இவரது கால்ஷீட் கிடைக்குமா என பல தயாரிப்பு நிறுவனங்கள்  காத்திருக்கும் நிலையில், நேற்று சமூக வலைத்தளத்தில் பரவிய ஒரு செய்தி விஜய் ரசிகர்களை மிகவும் கோபத்தில்  ஆழ்த்தியுள்ளது.

 
நடிகர் விஜய் பற்றி, ரட்சகன் படத்தை இயக்கிய ப்ரவீன் காந்தி பேட்டி ஒன்றில் ‘விஜய் கோலா கம்பெனி’ விளம்பரத்திலும்  நடிக்கின்றார். அதே சமயம் கத்தி படத்தின் வசனமும் பேசுகின்றார், இது மிகப்பெரிய கேவலமாக இல்லையா, அவரை பார்க்கும் போது எனக்கு கோபம்தான் வருகிறது என்று திட்டியுள்ளார். இதனை கேட்ட விஜய் ரசிகர்களுக்கு இவை கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது.
 
இதனை தொடர்ந்து விஜய் எப்பொழுதோ நடித்த கோலோ விளம்பரத்திற்கும், தற்போது முடிச்சுபோட்டு பேசி வருவது எந்த  விதத்திலும் நியாமில்லை என்றும் ரசிகர்கள் ப்ரவீன் காந்திக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :