வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (08:51 IST)

பாபா ரி ரிலீஸ் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

பாபா படத்தின் ரி ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து படத்தைப் பற்றி ஒரு தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது டிசம்பர் 12-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளில் ‘பாபா’ படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் நேற்று பாபாப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. ஆனால் டிரைலர் பார்த்த ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியே வெளிப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பே பாபா படத்தில் சில பில்டப் காட்சிகள் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனால் அந்த காட்சிகளைக் கூட இப்போதைய காலத்தில் டிரைலரில் வைக்க, அது சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆகி வருகிறது.

இந்நிலையில் பாபா முந்தைய வடிவம் கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஓடும் விதமாக இருந்த நிலையில், இப்போது 2 மணிநேரம் 35 நிமிடம் ஓடும் விதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் படம் டிசம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.