வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (12:20 IST)

பாட்ஷா பாய்... ரஜினியைவிட்டால் விஜய்தானாம்

பாட்ஷா பாய்... ரஜினியைவிட்டால் விஜய்தானாம்

ரஜினியின் மைல்கல் திரைப்படம் பாட்ஷா. அதேபோல் ஒரு படம்தான் மாஸ் ஹீரோக்களின் எவர்கிரீன் விருப்பம். முடிந்தால் பாட்ஷா ரீமேக்கில் நடித்துவிடுவது என்றும் இருக்கிறார்கள்.


 


படத்தை தயாரித்த சத்யா மூவிஸும், நடித்த ரஜினியும் பாட்ஷாவை ரீமேக் செய்து காமெடி செய்ய தயாராகயில்லை. அதனால் இன்றுவரை பாட்ஷா ரீமேக் உரிமை யாருக்கும் விற்கப்படவில்லை.
 
வருடத்துக்கு இரண்டுமுறையாவது, பாட்ஷா ரீமேக்கில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கணக்கெடுப்பு நடத்தப்படும். அதிகமுறை வென்றவர் விஜய். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் எந்த ரீமேக்கில் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. தரணி போன்ற இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் பெருவாரியான விருப்பம், பாட்ஷா.
 
தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பாட்ஷா ரீமேக் செய்யப்பட்டால்... ம், நன்றாகத்தான் இருக்கும்.