ரூ.1500 கோடியை அசால்ட்டாகக் கடந்த ‘பாகுபலி 2’


Cauveri Manickam| Last Modified வெள்ளி, 19 மே 2017 (18:53 IST)
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 2’, ரூ.1500 கோடி ரூபாயை அசால்ட்டாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

 

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பாகுபலி 2’. தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இந்தியாவில் மட்டும் 6000 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்தியப் படம் என்ற சாதனையைப் பெற்றிருக்கிறது.
 
அத்துடன், வெளிநாடுகளிலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது ‘பாகுபலி 2’. அமெரிக்காவில் வெளியான ஹாலிவுட் படங்களிலேயே, அதிகம் வசூலித்தது இந்தப் படம்தானாம். நேற்றுடன் முடிவடைந்த மூன்று வார முடிவில், இந்தியா மற்றும் உலக வசூலைச் சேர்த்து 1500 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக மார்தட்டிக் கொள்கின்றன தெலுங்கு சினிமா வட்டாரங்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :